ஆண்டவரே என் நம்பிக்கை
ஆண்டவரே என் நம்பிக்கை ஆண்டவர் மீது நம்பிக்கை வைப்பவர் நீரின் அருகில் நடப்படும் மரத்துக்கு ஒப்பாவார்கள் . ( எரே 17:8) ஆண்டவர் மீது நாம் வைக்கும் நம்பிக்கை துணையாளராம் தூய ஆவியின் அருகில் நம்மை அழைத்துச் சென்று அவரில் நம்மை வளர வைக்கிறது . ஏனெனில் தூய ஆவியே உயிர்ப்புனல் ( யோவா 7:37) இறை நம்பிக்கை நம்மை ஆவியில் வளரச் செய்து செழிக்க வைக்கிறது . இறை நம்பிக்கையால் ஆவியின் கனிகளும் , கொடைகளும் , வரங்களும் , நம்மில் நிரம்பித் ததும்பும் . பிரச்சனைகளை வெல்லும் இறை நம்பிக்கை : இறை நம்பிக்கை உள்ள மனிதனாலேயே மட்டும்தான் பிறருக்கு நம்பிக்கை ஊட்டும் ஒளியாக மாற முடியும் . இறை நம்பிக்கை உள்ள மனிதனால் மட்டுமே முடியாத காரியங்களை நிகழ்த்த முடியும் . கடுகளவு நம்பிக்கை இருந்ததால் மலையளவு பிரச்சனைகளையும் ஆழ்கடலில் தூக்கி எறிந்து விடமுடியும் . ( மத் 21:21) நமது இறைநம்பிக்கையின் மூலம் பிறரது வாழ்க்கையில் உள்ள இன்னல்களில் இருந்து விடுவிக்கும் வழிகாட்டியாக நாம் மாற முடியும் . நமது ...