நிறைவை நோக்கி
நிறைவை நோக்கி நமது வானகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள் . ( மத் 5:48 ) நிறைவின்மையாலே நமது ஆதி பெற்றோர் பாவம் செய்தனர் . அவர்களது மனநிறைவு இல்லாத தன்மையே ஆண்டவருடைய அன்பின் வளத்தைச் சுவைக்கத் தடையாக இருந்தது . அவர்களது நிறைவின்மை அவர்களுக்கு அச்சத்தைத் தோற்றுவித்தது . இந்த வளமையானத் தோட்டம் என்றுமே நமக்கு அளிக்கப்படுமா ? அல்லது நாம் விரட்டப்படுவோமோ என்ற பயம் அவர்களுக்கு இருந்தது . இந்த அச்சத்தைப் பயன்படுத்திக் கொண்ட அலகை , பாம்பு வடிவில் வந்து அவர்களை பாவம் செய்யத் தூண்டியது . நாம் கடவுளைப் போல் ஆக வேண்டும் என்ற பேராசை எழுந்தது . எனவே மனநிறைவின்மை பயத்தையும் , பேராசையையும் தூண்டி , முதல் மனிதனைப் பாவத்திற்கு அடிமைப்படுத்தியது . காயினின் நிறைவின்மை : நமது ஆதிப்பெற்றோரிடம் இருந்த மன நிறைவின்மை , அவர்களுக்குப் பிறந்த காயினிடமும் தொடர்கிறது . அவன் கடவுளுக்கு அளித்த காணிக்கைகள் முதற்கனிகளாக இல்லை . மனநிறைவோடு மகி...