உண்மையை இடைக்கச்சையாக் கட்டிக் கொள்வோம்
உண்மையை இடைக்கச்சையாக் கட்டிக் கொள்வோம் நார்ப்பட்டுக் கச்சை ஒன்றை வாங்கிக் கொள்ள இறைவாக்கினர் எரேமியாவை ஆண்டவர் அழைக்கின்றார் . பின்னர் அதனை ஆற்றில் உள்ள பாறையில் ஒளித்து வைக்கச் சொல்கிறார் . பின்னர் அதை எடுத்துப் பார்க்கும்போது அது இற்றுப் போயிருக்கின்றது . ( எரே 13:1-11) போலித்தனம் , உண்மை அற்ற நிலை , இறை திட்டத்திற்குச் கீழ்ப்படிந்து அதன்படி நடவாமல் இருத்தல் எல்லாம் பாறையாக மாறி உண்மை அதில் மறைந்து நைந்து போய் விடுகிறது . எனவே தூய ஆவியானவர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடினாலும் உண்மை இல்லாததால் கச்சை ஆண்டவரோடு ஒன்றித்திருப்பது போல் நம்மால் ஆண்டவரோடு இணைந்து இருக்க முடியவில்லை . ஏனென்றால் துணையாளாராம் தூய ஆவியானவர் உண்மையின் ஆவியானவர் ( யோ 14 : 17) அவர் நமக்காகப் பரிந்து பேசிச் செபிப்பார் . நம்மிடம் உண்மை இல்லையெனில் நாம் வேண்டுவதை எவ்வாறு பெற முடியும் ? பொய்யாம் அலகை :- ...