கடவுள் அன்பாய் இருக்கிறார்
கடவுள் அன்பாய் இருக்கிறார் இறைவன் நம்மைத் தமது சாயலாகப் படைத்தார் . இறைவன் அன்பாய் இருக்கிறார் . ( 1 யோவா 4:16 ) எனவே அவரது சாயலாகப் படைக்கப்பட்ட நம்முள் நிரம்பி இருக்க வேண்டியது அன்பு . எனவே மனித வாழ்க்கை இறைவன் விரும்பியபடி அமைய அடிப்படைத் தேவை அன்புப் பரிமாற்றமே . மரியின் வழி அன்பு வழி : அன்னை மரியைப் போன்றே ஏவாளும் ஜென்மப் பாவமில்லாமல் பிறந்திருந்தாலும் ஏவாளின் சுயநலம் அவளது வழித்தோன்றல்களை பாவத்திற்கு அடிமையாக்குகிறது . மன மகிழ்ச்சியோடு தோட்டத்திலே வாழ்ந்திருந்தாலும் இறைவனைப் போன்று மாற வேண்டும் எனும் சுயநலம் மனுக்குலத்தையே அழிவுக்கு இட்டுச் செல்கிறது . அன்னை மரியாவுக்கோ , அவரது அழைப்பு மனுக்குலத்தை மீட்கும் மகனைப் பெற்றெடுக்கும் கடமை . அதுவும் கன்னிப்பருவத்தில் . ஆனால் இறைவன் மீதும் உலக மக்கள் மீதும் கொண்ட அன்பு கனன்று எரிந்து கொண்டிருந்தாள் இறைவனின் தூய்மை அவருள் குடிகொள்கிறது . எனவே உயி...