அன்பே கடவுள் என்றால்
அன்பே கடவுள் என்றால் இறைவன் தன்னைப் போன்ற சாயலில் மனிதனைப் படைத்தார் . இதுவே நல் விதை . இந்த விதை விளைந்து நல்ல பயிராக வளருகிறது . இறைவன் மனிதனோடு உறவாடுகிறார் . தினமும் மனிதனைச் சந்திக்கின்றார் . பேசுகின்றார் ; உலாவுகின்றார் . எனவே இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள பிணைப்பு அன்பு பிணைப்பாக உள்ளது . அவ்வாறே ஆதாமுக்கும் , ஏவாளுக்கும் உள்ள உறவும் அன்பினால் கட்டுண்டுள்ளது . எனவே மனிதன் ஏவாளை என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள் என்று கூறுமளவுக்கு ( தொ . நூ 2:23 ) அன்பு செய்தான் . இந்த நேரத்தில் எதிரி தன் விதைகளையை விதைக்கின்றான் . கடவுளைப் பற்றி அவதூறைப் பரப்பி கடவுளுக்கு எதிராக ஏவாளைத் தூண்டுகிறான் . இவ்வாறு வெறுப்பு விதைக்கப்படுகிறது . வெறுப்பின் விளைவுகள் : வெறுப்பு கீழ்ப்படியாமையைத் தூண்டுகிறது . கீழ்ப்படியாமை முதல் பாவத்திற்குக் காரணமாகிறது . இவ்வாறு அலகை விதைத்த விதை கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உறவை முறி...