Posts

Showing posts from July 3, 2020

ஜெபக் கருத்துக்கள் - 3

ஜெபக்   கருத்துக்கள் - 3                                                                                 -         விண்ணரசி   ரத்னகுமார் பிள்ளைகளை மன்னித்து அன்பு செய்து ஏற்றுக் கொள்ள வேண்டும் .  இறை ஊழியர்களை தவறாக வழிநடத்துபவர்களையும் , பாவத்தில் விழச் செய்பவர்களையும் உமது பாதத்தில் ஒப்புக் கொடுக்கிறோம் .   தீயப் பழக்க வழக்கங்களை உமது பாதத்தில் ஒப்புக் கொடுக்கிறோம் .  பிறரை தீர்ப்பிடும் பாவத்திலும் சாபத்திலும் உள்மனக் காயங்களிலிருந்தும் விடுவித்தருளும் .  வாழ்க்கை துணை , in-laws மற்றும் சகப்பணியாளரின் துன்பங்களுக்கு காரணமான பாவங்களிலும் சாபங்களிலும் உள்மனக்காயங்களிலிருந்தும் விடுவித்தருளும் .  மன மாற்றத்தை உமது பாதத்தில் ஒப்புக் கொடுக்கிறோம் .  அகங்கா...

கதவு அருகில் நின்று தட்டும் இறைவன்

கதவு அருகில் நின்று தட்டும் இறைவன்           இறைவன் நமது கதவு அருகில் நின்று தட்டிக் கொண்டிருக்கிறார் . ( தி . வெ 3:20 ) நாம் கதவைத் திறப்பதை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறார் . கதவு தட்டும் ஓசை நமக்கு கேட்டால் மட்டுமே நம்மால் கதவைத் திறக்க இயலும் . நமது இதயம் தாகத்தோடு இறைவனுக்கு ஏங்கி இருந்தால் மட்டுமே காதுகளில் ஒலி கேட்கும் . இல்லாவிடில் கேட்டாலும் செவிடர்களாய் தான் இருப்போம் . ( எசா 6:10 ) இறைவிருந்து :           இறைமகன் விண்ணக , மண்ணக அரசராக இருந்தபோதிலும் நம்மைத் தேடி வருகிறார் . இவ்வுலக அரசர்கள் போன்று மாடமாளிகைகளில் வசித்துக் கொண்டு நம்மை அடிமைகளாக நடத்துவதில்லை . இறைமகனின் அன்பும் , இரக்கமும் நம்மில் பெருகி தாழ்ச்சியுடன் நாம் வாழும்போது கீழ்ப்படிதலுடன் நம் இதயக்கதவைத் திறக்க முடியும் . இறைவனின் திட்டத்தை நிறைவேற்றுவதே என் உணவு ( யோ 4:34 ) என்பதற்கேற்ப இறைவன் நமக்கு அளித்துள்ள ஆசீர்வாதங்களை நமக்குப் பெற்றுத்தர இறைமகன் நமது இதயக் கதவு அருகில் நின்று தட்...

தீர்ப்பு அளிப்பது இறைவனின் வார்த்தையே

தீர்ப்பு அளிப்பது இறைவனின் வார்த்தையே           நாம் நமது கண்ணில் இருக்கும் மரக்கட்டையை விட்டுவிட்டுப் பிறர் கண்ணில் இருக்கும் துரும்பை அகற்றப் பார்க்கிறோம் . ( லூக் 6:41 ) நாம் பெரும் பாவிகளாக , சுயநலக் காரர்களாக , மடையர்களாக இருப்போம் . நமது பலவீனங்களை மறைக்க பிறருடைய இயலாமையைப் பெரிதுபடுத்திப் பேசுகிறோம் . நீதியுடன் இணைந்த அர்ப்பணிப்பு :           ஆண்டவருக்குக் காணிக்கை அளிப்பது மிகவும் முக்கியமே . ஆனால் பிறரைக் குற்றப்படுத்தி , காயப்படுத்தி இரக்கமின்றி ஒரு வாழ்க்கை வாழும்போது நமது அர்ப்பணம் அர்த்தமற்றதாகி விடுகிறது . ( மத் 23:23 ) பழைய ஏற்பாட்டில் சகோதரன் ஆபேலுடன் மனத்தாங்கல் கொண்ட காயினின் காணிக்கை ஏற்கப்படவில்லை . தாழ்ச்சியோடு இணைந்த பாவமன்னிப்பு :           பாவமே அறியாத இறைமகன் இயேசு நமது பாவங்களுக்காக சிலுவை மரணம் ஏற்றார் . பாவச் சூழ்நிலையில் வாழுகின்ற நாம் பாவச் சேற்றிலிருந்து விடுவிக்கப்பட்டபின் பிறரையும் பாவத்தி...