Posts

Showing posts from June 18, 2020

ஜெபக் கருத்துக்கள் - 1

ஜெபக் கருத்துக்கள் - 1 -        விண்ணரசி ரத்னகுமார் பெற்றோர்களையும் உடன்பிறந்தவர்களையும் இரத்த உறவுகளையும் மன்னித்து அன்பு செய்து ஏற்றுக் கொள்ள வேண்டும் .  வாழ்க்கை துணையையும் , சகப்பணியாளரையும் அவர்களின் வீட்டாரையும் ,     in-laws ஐயும் மன்னித்து அன்பு செய்து ஏற்றுக் கொள்ள வேண்டும் .  கீழ்படியாமையை உமது பாதத்தில் ஒப்புக் கொடுக்கின்றனர் .  இறைவா , உமக்கு முதலிடம் கொடுக்காத பாவத்திலும் , சாபத்திலும் உள்மனக் காயத்திலுமிருந்து விடுவித்தருளும் .  சுயநலம் , சுயநல நோக்கை ஒப்புக்கொடுக்கிறோம் .  இறையன்பு , பிறரன்பு , மன்னிக்கும் அன்பால் நிரப்பியருளும் .  இறை இரக்கத்தால் நிரப்பியருளும் .  மனத்தாங்கள் , வெறுப்பு வைராக்கியத்தை ஒப்புக்கொடுக்கிறோம் .  இறை ஊழியர்கள் பணிபுரிய தடையாக இருந்த பாவங்களிலும் சாபங்களிலும் உள்மனக் காயத்திலுமிருந்து விடுவித்தருளும் . Sex  பாவங்களிலும் சாபங்களிலும் உள்மனக்காயங்களிலிருந்தும் விடுவித்தருளும...

அன்னைக்குக் கரம் குவிப்போம்

அன்னைக்குக் கரம் குவிப்போம் இறைவனின் எதிர்பார்ப்பு :           எகிப்து நாட்டிலே அடிமைத்தனத்தில் வேதனைப்பட்ட இஸ்ரயேல் மக்களை மோசே இறைவாக்கினரைக் கொண்டு விடுவிக்க இறைவன் எண்ணுகிறார் . எனவே மோசே இறைவாக்கினரின் பின் இஸ்ரயேல் மக்கள் தாங்கள் நெடுங்காலமாய் வாழ்ந்த நாட்டை , வீட்டை , நிலபுலன்களை விட்டுக் கிளம்புகின்றனர் . நாம் வாழும் இந்த காலத்தில் ஒரு தனி மனிதரை நம்பி வேறு நாட்டுக்கு கடவுளின் பெயரால் பெரும் கூட்டமான மக்கள் செல்வோமா என்பது கேள்விக்குறி . இஸ்ரயேல் மக்கள் யாவே கடவுள் மீது கொண்ட நம்பிக்கை நம்மை வியக்க வைக்கும் . செங்கடலின் நடுவே நடந்து செல்லும்போது இருபக்கமும் சுவர் போல் எழுந்து பயமுறுத்தி நிற்கும் கடல் நீர் ஒருபுறம் ; துரத்தி வந்த எகிப்து மக்களை மூழ்கடிக்கும் நீர்த்திறள் மறுபுறம் - என்று அச்சுறுத்தி நின்றாலும் பதட்டமில்லாமல் மோசே தலைமையில் இறைவார்த்தையை நம்பிச் செல்கின்றனர் . நாற்பது வருட பாலைவன வாழ்க்கையின் தளர்ச்சிகள் முணுமுணுப்பை மக்களிடையே ஏற்படுத்துகின்றன . மனித பலவீனத்தால் இஸ்ரயேல் மக்கள் செய்யும் தவற...

உவர் நிலம் வளமாக மாற …

உவர் நிலம் வளமாக மாற …           ஆதாம் கடவுளுக்குக் கீழ்ப்படியாததால் அந்தப் பழத்தை விளைவித்த நிலம் சாபத்துக்குள்ளானது . எனவே நிலம் முதலில் முட்செடிகளையே பிறப்பிக்கும் . பின்னர் வயல் வெளியாக மாறி மனிதருக்குப் பயன்படும் . அதற்கு மனிதன் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தும்போது நிலம் ஈரப்பதமாக மாறுகிறது . ( தொ . நூ . 3:17-19 ) சாபம் உருவாகும் விதம் :            கடவுளை அன்பு செய்யாமல் அவர் கட்டளையை மீறி மற்றக் காரியங்களுக்கு முதலிடம் கொடுக்கும்போது அந்தக் காரியங்கள் நமக்குச் சாபத்தையே தரும் . அவ்வாறு தவறி நாம் பாவம் செய்தால் அதிலிருந்து விடுபட மனம் வருந்தி ஊதாரி மைந்தனைப் போல் நாம் நம்மை தாழ்த்தி நல்ல ஒப்புரவு அருட்சாதனத்தை இறைவன் விரும்பும் அளவில் பெற்றுக்கொள்ள வேண்டும் . மீண்டும் அந்தத் தவறில் விழாமல் இருக்க உழைப்பின் பயனை , வாழ்வின் வளமையை திறமைகளை இரக்கச் செயல்களாக மாற்ற வேண்டும் . இரக்கச் செயல்களின் மூலம் வறண்டுபோன நம் நெஞ்சங்களில் ஈரம் துளிர்க்கும் . அப்போது நம்மைச் சந்திப்போரிடம் நமக்க...