மரபுரிமைச் சொத்துடன் ஞானமும் சேர்ந்து அளிக்கப்படும்
மரபுரிமைச் சொத்துடன் ஞானமும் சேர்ந்து அளிக்கப்படும் பெற்றோரின் சொத்துரிமை பிள்ளைகளுக்கு வழங்கப்படுகிறது . நமது பாரம்பரியத்தில் வீட்டின் தலைமகனுக்கு இவ்வுரிமை அதிகமாக வழங்கப்படுகிறது . மூத்தமகன் சகோதர , சகோதரிகளையும் , வயதானவர்களையும் பாதுகாக்கும் பொறுப்பையும் பெறுகிறார் . இவ்வாறு கடமை தவறாமல் பொறுப்பு உணர்ந்து செயல்படும் மூத்த மகனின் அனுபவ அறிவு அதிகரிக்கின்றது . உண்மையாக , முழு மனதுடன் , பெற்றோரின் விருப்பத்தின்படி நடக்கும் மூத்த மகன் ஞானம் மிக்கவராய் எல்லாரோலும் புகழப்படுகிறார் . இவ்வாறே விண்ணகமாம் நம் தாய்நாட்டை அடைய இறைவனது விருப்பப்படி நாம் நடக்க வேண்டும் . எனது எண்ணங்கள் உனது எண்ணங்கள் அல்ல : இறையன்பும் , பிறரன்பும் நிறைந்து நம்மில் வழியும் போதுதான் இறை விருப்பத்தின்படி நடக்க முடியும் . நம்மை அன்பு செய்யாதவர்களையும் அன்பு செய்ய வேண்டுமென்பதே இறைவனின் விருப்பம் . ( மத் 5:44 ) ஏனென்றால் இறைவனின் எண்ணங்கள் நமது எண்ணங்கள் அல்ல . ( எசா 55:8 )...