Posts

ஜெபக் கருத்துக்கள் - 4

ஜெபக்   கருத்துக்கள் - 4                                                                                 -         விண்ணரசி   ரத்னகுமார் பொறுமையற்ற தன்மையை ஒப்புக் கொடுக்கிறோம் . சுயப் பரிசோதனை செய்ய வேண்டும் . பிறர் மீது இரக்கம் கொண்டு , ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ வேண்டும் . நன்மை செய்யாத பாவத்திலும் சாபத்திலும் உள்மனக் காயங்களிலிருந்தும் விடுவித்தருளும் . இரக்க செயல்கள் புரிய வேண்டும் . தொண்டு புரிய வேண்டும் . தொண்டு செய்வதை ஊக்குவிக்க வேண்டும் . இயலாமையை ஒப்புக் கொடுக்கிறோம் . உலகத்திலுள்ள அனைத்து இறை ஊழியர்களையும் பரிசுத்த ஆவியால் நிரப்பியருளும் . அவர்கள் அனைவரையும் இயேசுவின் திரு இருதயத்திற்கும் அன்னை மரியாவின் மாசற்ற திரு இருதயத்திற்கும் ஒப்புக் கொடுக்கிறோம் . பல...

அழைக்கப்பெற்றவர் பலர்; தேர்ந்தெடுக்கப்பட்டவர் சிலர்

அழைக்கப்பெற்றவர் பலர் ; தேர்ந்தெடுக்கப்பட்டவர் சிலர்           திருமண விருந்து உவமையில் ( மத் 22:1-14 ) அரசர் தம் மகனுடைய திருமண விருந்துக்கு அழைக்கப்பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வரும்படி பணிக்கிறார் . அவர்களோ வர விரும்பவில்லை . பின்னர் திருமண விருந்தின் ஏற்பாடுகளை ( உணவு வகைகளை ) விளக்கி அழைக்குமாறு வேறு பணியாளர்களை அனுப்புகிறார் . அவர்களோ பொருட்படுத்தவில்லை . மாறாக இழிவுபடுத்தி அனுப்புகிறார்கள் . கோபமுற்ற அரசன் அவர்களை அழித்துவிட்டு அழைப்பைச் சாலையோரம் உள்ள அனைவருக்கும் விடுக்கிறார் . அவர்களும் வருகின்றனர் . திருமண ஆடை அணியாது திருமணத்தில் பங்குபெற்ற ஒருவனைக் கண்டு அரசன் கோபமுற்று அவனது காலையும் , கையையும் கட்டி இருளில் தள்ளும்படி பணிக்கின்றான் . உவமையின் விளக்கம் :           திருமண ஆடை அணியாத மனிதன் என்பவன் திருமணக் கொண்டாட்டத்துக்குத் தன்னைத் தகுதிப்படுத்தாதவன் . அவன் தன்னையே வெறுப்பதால் தனது உயர்ந்த அழைப்பை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை . அழைத்தவரின் உன்னத...

இறைவனோடு உரையாடல்

இறைவனோடு உரையாடல்           இறைவனோடு நமக்குள்ள உரையாடலே செபம் . இந்த உரையாடல் இறைவனைப் புகழ்வதாகவோ , மன்னிப்பு கேட்பதாகவோ , மன்றாட்டாகவோ , நன்றியறிதலாகவோ இருக்கலாம் . உரையாடல் என்பது இருவருக்கு இடையே நடைபெறுவது ஆகும் . எனவே விவிலிய வார்த்தைகளை வாசிக்கும் போதும் , கேட்கும்போதும் , தியானிக்கும் போதும் , மறையுரை கேட்கும்போதும் இறைவன் நம்மிடம் உரையாடுகின்றார் . இருவரும் மனம் ஒருமித்து , மனம் திறந்து , ஒருவர் மற்றவரை மதித்து அன்பு செய்து உரையாடும்போது தான் அது வெற்றிகரமான உரையாடலாக இருக்கும் . திருப்பலி இறைவனுக்கும் நமக்கும் உள்ள உரையாடலின் சிகரமாக உள்ளது . திருப்பலியின் போது இறைவன் நம்முன் வந்து நம்மோடு வார்த்தை வடிவிலும் , அப்ப வடிவிலும் இரண்டறக் கலக்கின்றார் . தொடக்கத்தில் தன் உயிர்மூச்சை ஊதி மனிதனை இறைவன் உருவாக்கினார் . இன்று திருப்பலி என்னும் உன்னத உரையாடலின் நேரத்தில் தூய ஆவியானவரின் பிரசன்னம் நம்மைச் சூழ்ந்து நமக்குள் ஊடுருவி நம்மில் ஒன்றறக் கலக்கிறது . திருவிருந்தின் மூலம் தூய ஆவியானவரின் அற்புத ஆற்றலை நாம் உணர்ந்து அனு...