ஜெபக் கருத்துக்கள் - 4
ஜெபக் கருத்துக்கள் - 4
- விண்ணரசி ரத்னகுமார்
- பொறுமையற்ற தன்மையை ஒப்புக் கொடுக்கிறோம்.
- சுயப் பரிசோதனை செய்ய வேண்டும்.
- பிறர் மீது இரக்கம் கொண்டு, ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ வேண்டும்.
- நன்மை செய்யாத பாவத்திலும் சாபத்திலும் உள்மனக் காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்.
- இரக்க செயல்கள் புரிய வேண்டும்.
- தொண்டு புரிய வேண்டும். தொண்டு செய்வதை ஊக்குவிக்க வேண்டும்.
- இயலாமையை ஒப்புக் கொடுக்கிறோம்.
- உலகத்திலுள்ள அனைத்து இறை ஊழியர்களையும் பரிசுத்த ஆவியால் நிரப்பியருளும். அவர்கள் அனைவரையும் இயேசுவின் திரு இருதயத்திற்கும் அன்னை மரியாவின் மாசற்ற திரு இருதயத்திற்கும் ஒப்புக் கொடுக்கிறோம்.
- பலவீனத்தை ஒப்புக் கொடுக்கிறோம்.
- போஜன பிரியத்தை ஒப்புக் கொடுக்கிறோம்.
- பிறர் பெயரைக் கெடுக்கும் பாவத்திலும் சாபத்திலும் உள்மனக் காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்.
- சாத்தானின் அந்தகாரம் சக்தியிலும், பில்லி சூனியக் கட்டுகளிலும் மாட்டுவதற்கு காரணமான பாவத்திலும் சாபத்திலும் உள்மனக் காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்.
- உலக மக்கள் அனைவரும் ஒருவரையொருவர் மன்னித்து அன்பு செய்து ஏற்றுக் கொண்டு இரக்கம் வைத்து ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ வேண்டும்.
- கொரோனா தாக்குதலிலும் பயத்திலுமிருந்து விடுவித்தருளும்.
- நான் என்னும் அகங்காரத்தை உமது பாதத்தில் ஒப்புக் கொடுக்கிறோம்.
- கேளிக்கைக்கு முதலிடம் கொடுக்கும் பாவத்திலும் சாபத்திலும் உள்மனக் காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்.
- தற்பெருமையை உமது பாதத்தில் ஒப்புக் கொடுக்கிறோம்.
- மரித்து போன பெற்றோர், தாத்தா பாட்டி, பிள்ளைகள், உடன்பிறந்தவர்கள், வாழ்க்கை துணை, in-laws, உற்றார் உறவினர்கள், நண்பர்கள், இரத்த உறவுகளின் ஆன்ம இளைப்பாற்றிக்காக ஒப்புக் கொடுக்கிறோம்.
- பிறரை வஞ்சித்து பறித்த பாவத்திலும் சாபத்திலும் உள்மனக் காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்.
- பிறரை ஏமாற்றிய பாவத்திலும் சாபத்திலும் உள்மனக் காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்.
தேவையான ஒப்புக்கொடுத்தல்கள். 75% ஆவது கடைபிடிக்க முயற்சி செய்கிறோம் ஆண்டவரே.
ReplyDelete